44
அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று MSM நகரில் குடி தண்ணீர் கழிவு நீருடன் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற விஷயங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், இது போன்ற விஷயங்கள் தேர்தலில் கண்டிப்பாக அப்பகுதி மக்களிடையே எதிரொலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.