Home » பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மளமளவென சரிவு !

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மளமளவென சரிவு !

0 comment

பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் கட்சி எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக மிகவும் பலவீனமாக தோற்றமளிக்கிறது. அக்கட்சி அடுத்தடுத்து 2 லோக்சபா பொதுத் தேர்தல்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் அதற்கு ஒரு நிரந்தர தலைவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொருபக்கம் பாஜக பலமிக்க கட்சியாக உருவெடுத்துள்ளது. அமித்ஷா, நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையில் அக்கட்சி 2 லோக்சபா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

2014ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, பல மாநிலங்களிலும் அக்கட்சி ஆட்சியை பிடிக்க துவங்கியது.

2014ம் ஆண்டு 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அந்த கட்சி, 2018ல் அபாரமாக 21 மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. அதில் சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் உண்டு.

இதன் காரணமாக இந்திய அரசியல் வரைபடத்தில், பெரும்பாலான பகுதிகளில் காவி வண்ணமாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. 2018ம் ஆண்டு பாஜக ஆளாத மாநிலங்கள் எவை என பட்டியலிடும் அளவுக்கு அக்கட்சி முன்னேறியது. அக்காலகட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியில் இல்லாமல் இருந்தது.

2015ல் 13 மாநிலங்கள், 2016ல் 15 மாநிலங்கள், 2017ல் 19 மாநிலங்கள், 2018ல் 21 மாநிலங்கள் என பாஜக ஆட்சி விரிவடைந்து கொண்டே சென்றது. ஆனால் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. எதிர்பார்க்காத அசாமில் வெற்றி பெற்ற பாஜகவால், அதன் பலமிக்க பகுதிகளான மத்திய பிரதேசம், ராஜஸ்ஸதான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வெல்ல முடியவில்லை. ஆந்திராவில், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் பாஜகவைவிட்டு பிரிந்தது. பாஜக கூட்டணி உடைந்ததால், கடந்த டிசம்பர் முதல் ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

2019ல் மத்தியில் மோடி அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தாலும், மாநிலங்களில் அதன் பிடி நழுவுகிறது. கர்நாடகாவில், அரசியல் ஆபரேஷன் மூலமாக பாஜக ஆட்சிக்கு வந்திருந்தாலும், மகாராஷ்டிராவில், அது ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இப்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter