Home » மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!

மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.

கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.பார்வையிட கூட அரசு அதிகாரிகள் இதுவரை யாருமே வரவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திமுக உறுப்பினர் நூருல் அமீன் நம்மிடம் கூறுகையில் மழைநீர் எளிதில் செல்ல எந்தவித வடிகாலும் இல்லாத காரணத்தாலும்,கடந்தகாலங்களில் எவ்வளவு கனமழை பெய்திட்டாலும் மழைநீர் கடலில் கலப்பதற்கு ஏற்றவகையில் இருந்தது, ஆனால் துறைமுகம் கட்டிய பிறகு மழைநீர் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் நீர்த்தேங்கி காணப்படுகிறது.முறையான வடிகால் இன்றி இருப்பதே குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததற்கான காரணமாகும்.இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரை மோட்டார் உதவிகொண்டு வெளியேற்றிட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter