அதிராம்பட்டினம் நடுவிக்காடு கிராமத்தில் ஏராளமான அதிரையர்களுக்கு சொந்தமாக தென்னை தோப்புகள் உள்ளன.
இந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தென்னந்தோப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை, மின் வாரிய ஊழியர்கள் சரிவர பராமரிப்பது இல்லை.
இதன் காரனமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், ஒயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிக்காடு தோட்டம் ஒன்றில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது சாய்ந்துள்ளது.
உயிர்ப்பலி ஏற்பட்டு விழிப்பதை விட தற்போதே விழித்து கொண்டால் விபத்தினை தடுக்கலாம்.