89
தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக டெல்டா உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பட்டுக்கோட்டை பகுதியில் விடாமல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் , ஆசிரியர்கள் , ஊழியர்கள் , வியாபாரிகள் என பல்வேறு வேலை செய்யும் மக்கள் விடாத மழையின் காரணமாக மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.