101
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கணமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை 02/12/19 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 02/12/19 விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.