272
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் கன மழையால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடைக்கின்றன.
இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் மழைநீரை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சரி செய்து வருகிறது , வடிக்காளில் உள்ள குப்பைகளை தூர்வாரி தேங்கிக்கிடக்கும் மழைநீரை அகற்றி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றி சரி செய்து வருகின்றனர்.