அதிரையில் இளைஞர்களின் முயற்சியால் உதவும் உள்ளங்கள் (டிரஸ்ட்) என்ற அமைப்பு புதிதாக உதயமாகி உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்று நிற்கும் பெற்றோர்கள் பலர், உண்ண உணவு இல்லாமலும், உடுத்த உடை இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு கைவிடப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது உதவும் உள்ளங்கள் என்ற இந்த அமைப்பு.
அதிரையில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், மிச்சமாகும் உணவை குப்பைகளில் கொட்டுவதோ அல்லது வீண் விரயம் செய்வது போன்றவற்றை செய்யாமல், இந்த அமைப்பிற்கு தகவல் கொடுத்தால், அவர்களே அந்த உணவை பெற்றுக்கொண்டு பசியால் வாடும் கைவிடப்பட்டோர் மற்றும் உணவு தேவை உள்ளவர்களுக்கு வழங்குவர்.
அதிரை இளைஞர்களின் இந்த அழகிய முயற்சிக்கு நம்மால் இயன்ற ஆதரவை வழங்கிடுவோம் !
தொடர்புக்கு: 9080019506,
8695688508,
6374722904.