ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியல் களம் பல்வேறு பல்டிகளை எதிர்கொண்டு வருகிறது. திடீரென சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு ஓ.பி.எஸை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை பழனிசாமி கைப்பற்றிவிட்டார்.
ஐவர் அணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கமும் இணைப்புக்கு பச்சைக் கொடிக்காட்டியதால் கழகத்தின் துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். இதனால் அவரது முழு ஆளுகையின் கீழ் இருந்த அதிரை நகர அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிரையில் தினகரன் அணியில் யாருமில்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக அதிமுக அம்மா அணியின் நகர அலுவலகத்தை வண்டிப்பேட்டையில் திறந்துள்ளனர். இதனை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மா.சேகர் திறந்து வைத்துள்ளார்.
இதனிடையே எதிரணியில் தங்களுக்கு ஆதரவான ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பதாக தினகரனின் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.