மதிக்க தெரிந்தவன் தான் மனிதன்…
அது எதுவாக இருந்தாலும் சரி…
உதாரணம் :
சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை புரிந்துக் கொண்டு….எப்பொழுதும் சாலை விதிகளை மதிப்பது நல்லது.
மேலும், லைசன்ஸ் வாங்காமலும், முரட்டு தனமாக வாகனத்தை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவது, இரு சக்கர வாகனத்தில் பெரிய காரில் செல்வது போல மூன்று முதல் ஐந்து நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்வது, வேகமாக வண்டியை ஓட்டுவது என பலவற்றை விதிமுறைகள் மீறி செயல் படுவதால் தான் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை எல்லாம் தடுக்கும் பொருட்டு அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனையும் மீறி மக்கள் இதுபோன்ற தேவை இல்லாத ஒன்றை செய்து தான் வருகிறார்கள்….!!
ஃபைன் போட்டு பார்த்தாங்க… திருந்தல !!
சாக்லேட் கொடுத்து பார்த்தாங்க…திருந்தல !!
ஒரிஜினல் லைசென்ஸ் கூடவே வைத்திருக்க வேண்டும் என சொன்னாங்க..அப்பவும் முடியல…!
கடைசியில….இப்ப போலிஸ்காரர் கை எடுத்து கும்பிடு போட்டு கெஞ்சி கேட்கிறார்…. தயவு கூர்ந்து …இது போன்று 3 முதல் 5 நபர்கள் பயணிப்பதை தவிருங்கள் என ! இப்பவாது கேட்பார்களா நம் மக்கள்…
ஒரு போலீஸ்காரர் கையை எடுத்து கும்பிட்டு கேட்கிறார் என்றால், அவர் எதற்காக இப்படி கெஞ்சி கூட கேட்க தயாரானார் என்பதை நம் மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் ….
இதே போலீசார் நினைத்து இருந்தால், இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் செய்வதை பார்த்து, அவர் மீது வழக்கு கூட தொடர்ந்து இருக்க முடியும்…ஆனால் உயிரின் உன்னதத்தை உணர்ந்து, மக்களுக்கு மரியாதை கொடுக்கிறார் ….
இவரை போன்றே அனைத்து போலீசாரும் இருந்தால் நன்றாக இருக்கும் என வீண் வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு…இனியாவது திருந்தலாமே என நம் மக்கள் மனதில் நினைத்தால் தான்…இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
குறிப்பு :
இந்த சம்பவம் நடந்தது ஆந்திராவாக இருந்தாலும், அவர் போலீஸ்காரர் தான்….!! வாகனத்தில் வந்தவர்கள் மக்கள் தான்….!!