ஜூனியர் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணைக்கிளை இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழுப்புணர்வு பேரணி நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அதிரை நகர பள்ளி மாணவ மாணவியர்களின் சார்பில் தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2500 பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். இப்பேரணியானது அதிரை பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய போஸ்ட் ஆபிஸ் வழியாக சென்று காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சேர்மன் வாடி வழியாக மீண்டும் அதிரை பேருந்து நிலையம் வந்தடையும். பேரணி துவங்குவதற்கு முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். எனவே இப்பேரணியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
JRC & IRCS (Adirai)