நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.
இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தும் ஆர்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு CFI யின் மாவட்ட செயலாளர் M. நஜீப் அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் CFI மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களோடு அதிரை நகர CFI தலைவர் M.முஹமது நவாஸ் தலைமையில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

