தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று புதன்கிழமை (11/10/2017) ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை(VASAN EYE CARE)இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் 900க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு.S.I.ராஜ் குமார் மற்றும் அதிரை ரோட்டரி சங்கசெயலாளர் T.முகமது நவாஸ் கான், பொருளாளர் Z.அகமது மன்சூர் மற்றும் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர்கள் முகமது தமீம், ஹாஜாபகுருதீன், வைரவன், உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் நூருல்ஹசன், சாகுல் ஹமீது, அய்யாவு, வெங்கடேஸன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பித்தனர்.