குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜமாத்தார்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த கண்டன பேரணி, தக்வா பள்ளியில் இருந்து துவங்கி, ஜாவியா ரோடு, ஈசிஆர் சாலை வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மவ்லவி தேங்கை சர்புதீன், இராம. குணசேகரன், காளிதாஸ், அண்ணாதுரை, ஜியாவுதீன், மௌலானா சஃபியுல்லாஹ் அன்வாரி, SS. ஹாரூன் ரஷீது, அபுபக்கர் சித்தீக், கோவை செய்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இன்று காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அதிரையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டருந்தனர்.











