குளம் தூர்வாரப்பட்டு சாலையோரம் உள்ள குளத்துக்கரையில் மரங்களை வளர்க்கவும், மறுமுனையில் மாலை நேரங்களில் மக்கள் அமரும் வகையில் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுடன் இந்த குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கவும், சுற்றிலும் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்நியர்கள் உள்ளே நுழையாத வகையில் இரவு 8 மணிக்கு மேல் இந்த குளம் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலடிக்குளம் புணரமைக்கப்பட்டால் ஊருக்குள் நுழைபவர்களின் கண்களை குளிர்ச்சியடைய செய்யும். அல்லாஹ்வும் நமது முன்னோர்களும் நமக்கு அளித்த குளங்கள் மற்றும் ஏரிகள் இன்று முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும் மனைகளாகவும் உருமாறிக்கொண்டு வருகின்றன. ஊரின் நிலத்தடி நீருக்கு முக்கிய காரணியாக இருக்கும் குளங்களை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே நம்மால் அவற்றை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் அதிரையில் காணாமல் போன குளங்களின் வரிசையில் இப்போது உயிருடன் உள்ள குளங்களும் இணைந்துவிடும்.
– நன்றி அதிரை பிறை