தமிழர்கள் இஸ்லாமியர்களை அச்சுருத்தும் சட்டமான CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் வலுத்து வருவதால் இந்திய பாதுகாப்பு துறை ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவர் அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தை கட்டமைத்து ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி நுழைவுவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் சர்வத்கான் உரை நிகழ்த்தினார் அப்போது பேசிய அவர், மாணவர்கள் போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மாணவர்கள் போராட்டத்தில் குண்டு வீசுவோம் என அப்பட்டமாக கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் இவரது பேச்சை காற்றில் பறக்கவிடும் காவல் துறை மாணவர்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது கண்டிக்கதக்கது என்றார்.
இந்த தொடர் தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

