Home » ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!

ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!

0 comment

இந்தியாவில் மோடி அரசு அமல்படுத்த துடிக்கும் CAA, NRC, NPRஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் போராட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இச்சட்டத்தை எதிர்த்து கண்டன குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் அழுத்தம் மத்திய அரசுக்கு அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க மத்திய மோடி அரசு பொதுமக்களிடம் ஆதரவு கேட்க ஒரு பிரத்தியேக நம்பரை அறிமுகம் செய்துள்ளது. 886 என தொடங்கும் செல் போன் எண்ணை மோடி அறிமுகம் செய்தார். எதற்காக என்றால் குடியுரிமை திருத்தம் சட்டத்தை ஆதரிப்பவர்கள் இதற்கு மிஸ்டு கால் கொடுப்பதற்காக.

ஆனால் இதனை சரிவர விளங்காத சில இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நம்பர் என தவறுதலாக புரிந்து கொண்டு மிஸ்டு கால் கொடுத்து வருகின்றனர்.

எனவே அந்த நம்பருக்கு யாரும் மிஸ்ட் கால் கொடுக்க வேண்டாம் மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter