அமெரிக்காவில் புகழ்பெற்ற ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலில் ஒளிபரப்பாகும் ஃபாக்ஸ் & ஃபிரெண்ட்ஸ் என்ற நிகழ்ச்சி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களில் ஒருவரான முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் கர்ட்னி ஃப்ரியல் ‘டுநைட் அட் 10’ என்ற தன் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராகும் முன் அவரோடு பேசிப் பழகியது பற்றி நினைவுகூர்ந்திருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் – கர்ட்னி இடையே நடைபெற தொலைப்பேசி உரையாடல் பகுதிகள் டெய்லி நியூஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. இதில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு தன்னை போனில் அழைத்து, இருவரும் முத்தமிட்டுக்கொள்ள ட்ரம்ப் டவர் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார் எனக் கூறியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் உள்ளவர்களில் மிகவும் ஹாட்டானவர் என்றும் ட்ரம்ப் கூறியதாக ஃப்ரியல் தெரிவித்திருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன. ஆனால் ட்ரம்ப் அனைத்தையும் மறுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு ட்ரம்ப் பெண்களிடம் அத்துமீறிப் பேசியதற்கு ஆதாரமாக ஓர் ஒலிநாடா வெளியிடப்பட்டது. 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது அதற்காக ட்ரம்ப் மன்னிப்பு கோரினார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் செய்தியாளர் கர்ட்னி ஃப்ரியல் டொனால்ட் ட்ரம்ப் தன்னை முத்தமிட அழைத்தாகக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் புகழ்பெற்ற
ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலில் ஒளிபரப்பாகும் ஃபாக்ஸ் & ஃபிரெண்ட்ஸ் என்ற நிகழ்ச்சி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.