குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் வலுவான போராட்டங்களை முன்னெடுத்தனர். நாட்டில் எந்த ஒரு கல்லூரி மாணவர் தாக்கப்பட்டாலும் தனது ஆதரவைத் தெரிவித்து மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் முற்போக்கு மாணவர்கள் ஜே.என்.யூவில் உள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் ஜே.என்.யூ-விற்கு விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் விடுதி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அதன்படி இன்று வழக்கம்போல பல்கலைக்கழகம் வந்த மாணவர்களை பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஆய்ஷ் கோஷ் மற்றும் சக மாணவர் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசிக்கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, திட்டமிட்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தியது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களை குறிவைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி அந்த மாணவர்களை தாக்கியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் மாணவர் தலைவர் ஆய்ஷ் கோஷ் மண்டை உடைக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
JNUSU president Aishe Ghosh has an injury to her head. WTF is happening! Divert attention to JNU after Netflix and sex chats failed? pic.twitter.com/22Ph4tmVW0
— amrita madhukalya (@visually_kei) January 5, 2020
இந்த தாக்குதலுக்கு பிறகு ஒன்று கூடிய மாணவர்கள் பெண்கள் விடுதிக்குள் புகுந்தும் மாணவர்களை கூர்மையான ஆயுதம் மற்றும் கட்டைகளை வைத்து தாக்கத் தொடங்கினர்.
https://twitter.com/i_theindian/status/1213837097062170624?s=19
மாணவர்களை பாதுக்காக்கச் சென்ற பல்கலைக்கழக பேராசிரியர்களையும் ஏ.பி.வி.பி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது பெரியார் விடுதிக்குள் அத்துமீறி புகுந்து ஏ.பி.வி.பி யினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் மாணவிகள் தங்கள் அறைகளைப் பூட்டிக் கொண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர்.
https://twitter.com/i_theindian/status/1213861583840874497?s=19
ஏ.பி.வி.பி குண்டர்களின் இந்த கொடூர தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.





