117
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 27,30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று ஜனவரி 6ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவராக திரு சக்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றிபெற்ற நாளன்று அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு இன்று ஜனவரி 6ஆம் தேதி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.