மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இது நாளுக்கு நாள் போராட்டங்களாகவும் வலுவடைந்து வருகிறது.
இந்தச் சூழலில் அதிரை மேலத் தெருவில் உள்ள தாஜுல் இஸ்லாம் சங்கம் அதிரை மக்களுக்கு ஓர் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய குடியுரிமை சட்டம் சம்பந்தமாகவோ, மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமாகவோ, பொருளாதார கணக்கெடுப்பு சம்பந்தமாகவோ அல்லது டெங்கு தொழுநோய் இதுபோன்ற சுகாதாரத்துறை சம்பந்தமாகவோ கணக்கெடுப்புக்கு யாரேனும் அதிகாரிகள் உங்களுடைய வீட்டிற்கு வருகை தந்தால், அவர்களை ஜமாஅத்திடம் முறையான அனுமதியைப் பெற்று விட்டு வாருங்கள் என்று கூற அறிவுறுத்துகிறது.