91
நாளை(10.1.2020) அறிவிக்கபட்டு இருந்த மின்சார மாதந்திர பராமரிப்பு பணி நிறுத்தி வைப்பு.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் போன்ற பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நாளை இருக்காது என்று மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முஸ்லீம்களுக்கு விசேச நாளாகவும்,சிறப்பு தொழுகை இருக்கின்ற காரணத்தால் வேறு கிழமைகளில் மாற்றும்படி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் AK.கமால்,SDPI,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த மின்சார பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸிற்கு தெரிவித்தனர்.