இந்திய மக்களை,மண்ணின் மைந்தர்களை அந்நிய படுத்தும் இந்த CAA,NRC,NPRஆகிய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.
இந்த போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயல வில்லையே என ஆதங்கங்கம் உங்களில் யாருக்கும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.
இந்த ஆதங்கத்தை தாங்ள் சார்ந்துள்ள நாடுகளில் உள்ள தூதரகம் வாயிலாக மனுவாக அளிக்கலாம்.
இந்த முன்னெடுப்பால் பல நாடுகளில் இருந்தும் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கிடைப்பதால்.மோடி வகையராக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம்.
அந்நிய செலாவணியை இந்திய அரசுக்கு அதிகளவில் ஈட்டி கொடுக்கும் நாம் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தால் ஒருவேலை அரசு செவி சாய்க்க வாய்ப்பாக அமையும்.
ஆதலால் தான் அதிரை எக்ஸ்பிரஸ் இந்த கோரிக்கையை தங்களிடம் முன் வைக்கிறது.