டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான மீனாகுமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் 900க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் MF.முஹம்மது சலீம், சுற்றுசூழல் மன்ற நிர்வாகிகள் S.அஹமது அனஸ், N.ஷேக் தம்பி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை விநியோகித்தனர்.
அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!!(படங்கள் இணைப்பு)
304