Home » மோடி, யோகியை எதிர்த்தால் உயிரோடு வச்சு எரிச்சிடுவேன் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாஜக அமைச்சர் கொலை மிரட்டல் !

மோடி, யோகியை எதிர்த்தால் உயிரோடு வச்சு எரிச்சிடுவேன் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாஜக அமைச்சர் கொலை மிரட்டல் !

0 comment

பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக யாரேனும் கோஷமிட்டால் அவர்களை உயிரோடு எரித்து விடுவேன் என உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் முதல் மாநிலமாக அமல்படுத்தியது. இதுகுறித்து அலிகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார்.

அவர் அலிகார் முஸ்லீம் பல்கலை மாணவர்கள் போராட்டத்தை குறிப்பிட்டு பேசுகையில் மக்களின் வரிப்பணத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தை இயக்குகிறீர்கள். அப்படியிருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்புகிறீர்களா?

அப்படியே உயிரோடு வச்சி எரித்துவிடுவேன். நாட்டில் மக்கள் தங்குவதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் இது ஒன்றும் தர்மசாலை இல்லை. அலிகாரில் உள்ள முஸ்லீம்கள் அமைதி மற்றும் அன்பானவர்கள்.

நீங்கள் எங்கள் அதிகாரிகளையும் முஸ்லீம் சகோதரர்களையும் முற்றுகையிட்டால் நாங்கள் உங்களை அடிப்போம். ஒருவரையும் விடமாட்டோம். மக்களில் ஒரு சதவீதத்தினருக்கு குறைவாக உள்ளவர்களே கிரிமினல் எண்ணத்துடன் இருக்கிறார்கள்.

தனது பார்வையை பாகிஸ்தான் உயர்த்தினால் அது உலக வரைப்படத்தில் காணாமல் போகும். நம் மீது சீனா தாக்குதல் நடத்தினால் புல்லட்களுக்கு பதிலடியாக நாமும் புல்லட்களால் அவர்களை திருப்பி தாக்குவோம். பிரதமர் யாரை கண்டும் அஞ்சமாட்டார் என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாநில பாஜக அமைச்சரே கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு, கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter