Home » துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி…!

துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி…!

by admin
0 comment

காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் கவலையில்லை என்று கூறிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, தோழமை சரியில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் முதல்வராவதற்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சிக்கு தோழமையைப் பற்றி யாரும் சொல்லி கொடுக்க அவசியம் இல்லை. தோழமை சரியில்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றியதில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லாதபோது கூட கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி சோனியா காந்தியால் கொடுக்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை துரைமுருகன் சரியாக படிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி குறித்தும், கூட்டணி தர்மம் குறித்தும் திமுகவிற்கு தெரியவில்லை.

ஸ்டாலினை முதல்வராக்கக் கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது.
காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடத்திய கூட்டத்தை திமுக புறக்கணிதத்தை திமுக நியாயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேலூரில் துரைமுருகன் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போகட்டும். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பாக நான் துளி கூட கவலைப்பட மாட்டேன். கூட்டணியில் இருந்து விலகுவது காங்கிரஸுக்கு தான் நஷ்டம்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிவகங்கை மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம், துரைமுருகனின் பேச்சை சுட்டிக்காட்டி இதை ஏன் அவர் ‘வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை?’ என ட்வீட் செய்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter