மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நேற்று 17/01/2020 வெள்ளிக்கிழமை மாலை NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் மதுக்கூர் தர்ஹா திடலில் துவங்கிய இம்மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, SDPI மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் பழனி ஃபாரூக், தமிழ் விடுதலைப்புலி கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இம்மாநாட்டில் பெண்கள், இளைஞர்கள் என சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மாநாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.












