Home » அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்.

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்.

by
0 comment

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் இன்று (18-01-2020)   கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி.M.S.M.முஹம்மது அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது. முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்க்கும் வகையில்                               “அதிரை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு” உருவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2 :
வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அதிராம்பட்டினத்தில் அனைத்து சமூக பொதுமக்கள் கலந்து கொள்ளும் ‘அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி’ நடத்துவது என்றும் பேரணியின் இறுதியில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தேசிய கொடியேற்றி ‘அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி’ ஏற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3 :
பொதுமக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின்  (CAA) வாயிலாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட வல்லுனர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கொண்டு மாபெரும் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter