உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான அமைப்பாக இந்து யுவ வாகினி அமைப்பு இருந்து வருகிறது.
பஜ்ரங்தள் போன்று பழமைவாத சங் பரிவார ஆதரவு அமைப்பான இதன் தலைவராக சுனில் சிங் இருந்து வந்தார்.
முதல்வர் யோகியின் வலது கரமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,
இவர் மீதும் கூட இஸ்லாமிய மக்களுக்கு எதிரான உரை நிகழ்த்திய குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் நேற்று இவர் திடீரென அக்கட்சியை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் ஜி மற்றும் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இந்த செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளிவந்த போதும் நேற்று சுனில்சிங் பேசிய பேச்சை எந்த ஒரு ஊக்கமும் வெளியிடவில்லை.
அதில் அவர் பேசியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் யோகி அரசு நடந்து கொண்ட மிருகத்தனமான நடவடிக்கை என்றார் இது தமக்கு மிகவும் வேதனை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் யோகி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என்றும் யோகியின் ஆட்சி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்த இணைப்பு நிகழ்வில் ஏராளமானோர் சமாஜ்வாடி கட்சியில் இணைத்து கொண்டனர்.
