Home » பெரியார் பற்றி ரஜினி சொன்னது உண்மையா ? ஆதாரம் எதுவும் இல்லை… பரபர பின்னணி !

பெரியார் பற்றி ரஜினி சொன்னது உண்மையா ? ஆதாரம் எதுவும் இல்லை… பரபர பின்னணி !

0 comment

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது உண்மையா, இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்த ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார்.

இந்த நிலையில் பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது. நான் இல்லாததை சொல்லவில்லை. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப்பட்டதை, படித்ததைதான் நான் சொல்கிறேன், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் குறித்து ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இதுதான், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். 1971ல் பெரியார் ராமர், சீதாவிற்கு எதிராக பேரணி நடத்தினார். இதில் ராமர், சீதாவின் புகைப்படத்திற்கு உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்து கடவுள்களை பெரியார் அவமதித்ததை பற்றி யாருமே எழுதவில்லை.

ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். இதை கட்டுரையாக வெளியிட்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். துக்ளக் பத்திரிக்கையை அவர் பறிமுதல் செய்தார்.ஆனால் மீண்டும் சோ அதே செய்தியை, அடுத்த இதழில் வெளியிட்டார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

ஆனால் இதில் பல விஷயங்கள் வரலாற்று ரீதியாக தவறானது. முதல் விஷயம், பெரியார் பேரணி குறித்த செய்தியை துக்ளக் மட்டும் வெளியிடவில்லை. இன்னும் சில பத்திரிக்கைகளும் அன்று இதை செய்தியாக வெளியிட்டது. அதற்கு அடுத்து இந்த பேரணியில் ராமர் சிலைக்கு மாலை அணிவித்ததாக, ஆடை இல்லாமல் ஊர்வலம் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த பேரணியில் கலந்து கொண்ட, பேரணியை நேரில் பார்த்து அதை செய்தியாக வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஷியாம், திராவிட விடுதலை கழக நிறுவனர் கொளத்தூர் மணி, திக தலைவர் கி. வீரமணி, திக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் மற்றும் சில செய்தியாளர்கள் அன்று நடந்த சம்பவத்தை விளக்கி இருக்கிறார்கள்.

அதன்படி இந்த மாநாடு 1971ல் ஜனவரியில் நடந்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. முதல்வராக கருணாநிதி இருந்தார். ஜனவரி மாதம் 23 மற்றும் 24ல் நடந்தது. சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், இரண்டாவது நாள் பெரியார் கலந்து கொண்டு பேரணி செய்த போது, அவருக்கு ஜன சங்கத்தினர் கருப்பு கொடி கட்டினார்கள். அதோடு பெரியாரை நோக்கி செருப்பை வீசினார்கள்.

இதுதான் சர்ச்சையின் தொடக்கம். ஏனென்றால் அந்த செருப்பு பெரியார் மீது விழவில்லை. ஆனால் இது அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு அமைப்பினர் இடையிலும் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் சில திக தொண்டர்கள், அதே செருப்பை எடுத்து, ராமர் புகைப்படத்தில் அடித்தனர். ஆனால் ராமர் புகைப்படமோ, சீதா புகைப்படமோ இதில் உடை இல்லாமல் இல்லை. அதேபோல் அதற்கு செருப்பு மாலையும் அணியவில்லை. செருப்பால் மட்டும் அடித்தனர்.

மேலும் பெரியாரை நோக்கி செருப்பு வீசியதற்கு பதிலடியாகவே இதை செய்தனர். ஜனசங்கத்தினர்தான் இதை தொடங்கினார்கள். திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை. இதனால் திமுகவின் வாக்கு வங்கியும் சரியவில்லை. அதற்கு அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக அமோகமாக வெற்றபெற்றது, ததுக்ளக் இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்களை வெளியிடவில்லை. ரஜினி சொல்வது பொய், என்று கொளத்தூர் மணி, திக தலைவர் கி. வீரமணி, திக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ராமர் சிலைக்கு அந்த ஊர்வலத்தில் செருப்பு மாலை போட்டார்கள் என்று ரஜினிகாந்த் கூறுகிறார்கள். ரஜினி இது தொடர்பாக ஆதாரம் எதையும் வெளியிடவில்லை. ரஜினி துக்ளக் பத்திரிகையில் செய்தி வந்ததாக கூறினார். ஆனால் துக்ளக் பத்திரிகையில் வந்த செய்தி குறித்த ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. அதேபோல் பெரியார் ஊர்வலத்தில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று கூறினார். அதற்கும் அவர் ஆதாரம் வெளியிடவில்லை.

மாறாக 1971ல் இப்படி நடந்ததாக, 2017ல் அவுட்லுக் பத்திரிகையில் வந்த செய்தியை ரஜினி ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் இதிலும் கூட துக்ளக் செய்தி குறித்த புகைப்படமோ, அல்லது பெரியார் ஊர்வலம் குறித்த புகைப்படமோ இடம்பெறவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : One India Tamil

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter