தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டன.
இந்த பணியில் அதிரை நகர பேரூர் மன்ற துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.