குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை 9 மணிக்கு துவங்கப்பட்ட போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடைபெற்றும் போராட்டம் கைவிடப்படாததால், பள்ளி விடுமுறை விடப்பட்டது.