திருவாரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான ஜீனியர் கைப்பந்து போட்டி கடந்த 17,18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் நடைபெற்ற இறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி இறுதி திருச்சி மாவட்ட அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. திருவாரூர் மாவட்ட அணியில் சிறப்பாக விளையாடி சிறந்த அட்டாக்கருக்கான எடமேலையூர் விளையாட்டு கழக முன்னாள் தலைவர் மறைந்த கு. செல்வமணி நினைவு கோப்பையை எடமேலையூர் விளையாட்டு கழக வீரர் ந. விக்ரம் பெற்று கொன்டார்.
இப்போட்டியில் அதிரை மேலத்தெருவை சேர்ந்த நேஷனல் ஹார்டுவேர்ஸ் K.S.M. பகுருதின் அவர்களுடைய மகன் B. இர்ஃபான் அலி தலைமையில் சென்ற அணி இரண்டாம் பரிசை தட்டி சென்றது.
மேலும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் சூழற்கோப்பைகளை சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட இந்திய கைப்பந்து கழக வீரர் திரு. உக்ரா பாண்டியன் (IOB) வழங்கினார்.


