தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மிகவும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் அதிரை TIYA சங்கத்தினர் ஒரு வார காலமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த TIYA சங்கத்தின் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவரவர் பகுதிகளை சுத்தம் செய்து பல இடங்களில் புதிதாக குப்பை தொட்டிகள் அமைத்தனர்.
இதனை தொடர்ந்து இன்று(13/10/2017) காலை சுமார் 06:00 மணியளவில் அதிரை TIYA சங்கத்தின் இளைஞர்கள் இணைந்து நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர் . இம்முகாமை அமீரக TIYA சங்க தலைவர் மாலிக்(அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர்) அவர்கள் துவங்கி வைத்தார்.
இம்முகாமை அதிரை TIYA சங்க தலைவர் சபீர் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.
இம்முகாமிற்கு TIYA சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மேலதெரு இலைஞர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாம் TIYA சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் அருந்தினார்.