நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு அளித்துள்ள தமிழக அரசை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கல்லூரி மாணவ,மாணவிகள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வகுப்புக்களை புறக்கணித்து கல்லூரி வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக (21.01.2020) செவ்வாய்கிழமை ஒரு நாள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில் கம்பம் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.