நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டங்களையும், கண்டன பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அதிரை நகர SDPI கட்சி சார்பில் நேற்று (22.01.2020) புதன்கிழமை அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் N.முகமது புஹாரி, SDPI கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாம், Z.முஹம்மது தம்பி ஆகியோர் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்ததின் பின் விளைவுகள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வது குறித்தும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
முன்னதாக (30.01.2020) வியாழக்கிமை அன்று நடைபெற இருக்கும் அதிரை நகர SDPI கட்சியின் பெண்களுக்கான மாநாடு குறித்து, அதிரையில் உள்ள வீடுகளுக்கு பெண்கள் சென்று பிரச்சாரம் செய்வது போன்றவைகள் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

