அதிராம்பட்டினத்தின் பாரம்பரிய குடும்பங்களில் ஒன்றான MMS குடும்பத்தினர், இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், குடும்பத்தோடு தங்களை திமுக-வில் இணைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸிடம் MMS குடும்பத்தினர் கூறியதாவது : சுதந்திர போராட்ட காலத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் அதிராம்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளிலும் எங்கள் MMS குடும்பம் காங்கிரஸ் கட்சியில் வளர்ச்சிக்காகவும் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வந்தோம்.
1950 லிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை பொருப்புகளை வகித்து வந்தோம், தலைவர் G.K மூப்பனார் அவர்கள் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தோம், சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திரு G.K வாசன் அவர்கள் எடுத்த தவறான கொள்கை முடிவின் காரணமாக எங்கள் குடும்பம் ஜனாப் MMS அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகினோம்.
எங்களுடைய குடும்ப தலைவர் ஜனாப் MMS ஷேக்தாவூது மரைக்காயர் அவர்களும் அவர்களது சகோதரர்ளும் 1964 முதல் 50 ஆண்டு காலம் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவராக பணிபுரிந்துளார்கள்.
காலம் சென்ற ஜனாப் MMS அபுல்ஹசன் அவர்கள் 1973 ல் மயிலாடுதுறை நகர் மன்ற தலைவராகவும் மற்றும் 1991-1996, 1996-2000 இரண்டு முறை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராகவும் மற்றும் பொதுச் செயலாளர் ஆகவும் பணியாற்றிள்ளார்கள்.
ஜனாப் MMS அபுல்ஹசன் MLA, அவர்களின் சகோதரர் ஜனாப் MMS அப்துல் வஹாப் அவர்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
23-01-2020 அன்று ஜனாப் MMS அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நாங்கள் முழுமையாக எங்கள் குடும்பமும் எங்களுடைய குடும்ப நண்பர்களும் திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைய முடிவு செய்துள்ளோம் என்று அதிரை எக்ஸ்பிரஸிற்கு தெரிவித்தனர்.






