55
இந்திய நாட்டின் 71-வது குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் வருகிற ஜனவரி 26 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.
மதுக்கூர் மெயின்ரோடு லக்கி ஹார்டுவேர்ஸ் எதிரே உள்ள திடலில் காலை 9 மணியளவில் தேசியகொடி ஏற்றப்பட உள்ளது. இவ்விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என மதுக்கூர் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.