தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(13/10/2017) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் சுட்டி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண்.2ல் நடைபெற்றது.
இந்த கண்காட்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் RAA திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களுடைய அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியை பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.