தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறும் போராட்டத்தில் மல்லிப்பட்டிணம் மக்கள் பங்கேற்பு.
தேசம் முழுவதும் குடியுரிமை மசோதவிற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றனர் பொதுமக்கள். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று(25.1.2020) மாநில முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தை நடத்தியது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இயக்க,அரசியல் கட்சிகள்,பல்வேறு ஜமாஅத் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் பெருந்திரளாய் பங்கெடுத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.