நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை மற்றும் மல்லிப்பட்டினம் PFI, SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மல்லிப்பட்டின நகரத் தலைவர் ரபீக் கான் தேசிய கொடியேற்றினார்.
அதிரையில் SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது புகாரி தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த குடியரசு தின விழாவில் மல்லிப்பட்டினம் மற்றும் அதிரை நிர்வாகிகள், இளைஞர்கள் என அனைவரும் திரளாக கலந்துக் கொண்டனர்.
அதிரையில் SDPI கட்சி சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.