நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அபூபக்கர் தேசிய கொடியினை ஏற்றிட, ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் Dr.G.P.பாலாஜி MBBS., சிறப்புரையாற்றினார்.
அதிரையில் உள்ள சமூக ஆர்வலர், சாதனையாளர்களுக்கு சிறப்பு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.