நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், மல்லிப்பட்டிணம் முஹல்லா ஜமாஅத்தினர்,மீனவ சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். மேலும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.