இன்று 71 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லா வாசிகள், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு, உலமாக்கள், வியாபாரிகள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டு பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் அருகில் , மணிக்கூண்டு ஹாஜி காதர் முகைதீன் வக்ப் பள்ளிவாசல்,ரயிலடி மஸ்ஜிதே இப்ராஹிம் பள்ளிவாசல் போன்ற இடங்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்வில் ஜமாஅத் தலைவர்கள் இமாம்கள் மற்றும் பட்டுக்கோட்டை இஸ்லாமிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் உரை நிகழ்த்தினர்.
முன்னதாக மணிகூண்டு ஹாஜி காதர் முகைதீன் பள்ளி வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.



