Home » CAA-வுக்கு எதிர்ப்பு – அமெரிக்காவின் 30 நகரங்களில் இந்தியர்கள் போராட்டம் !

CAA-வுக்கு எதிர்ப்பு – அமெரிக்காவின் 30 நகரங்களில் இந்தியர்கள் போராட்டம் !

0 comment

இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அமெரிக்காவின் 30 நகரங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2014, டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியரல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழக்கப்படும் என பாஜக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவை அமெரிக்காவில் கொண்டாடுவதற்காக திட்டமிடப்பட்ட சூழலில், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 30 நகரங்களில் இந்தியர்கள் சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி நடத்தும் போர் இது” , “சிறுபான்மையினரை கொல்வதை நிறுத்துங்கள்” போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter