185
நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற உள்ளது.
இம்மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து சமூக மக்களும் கலந்துகொள்ள உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்திருந்தன.
அதனடிப்படையில் அதிராம்பட்டினத்தில் சற்று முன்னர் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.
இதேபோல் மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் போன்ற கடற்கரை கிராமங்களும் கைகோர்த்து ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போரட்டத்தின் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் வாயலாக காணலாம்.