Home » வேடிக்கை பார்த்த போலீஸ்.. போராடிய ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி.. ஷாக் வீடியோ !

வேடிக்கை பார்த்த போலீஸ்.. போராடிய ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி.. ஷாக் வீடியோ !

0 comment

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் ராம் பகத் கோபால் ஷர்மா என்று தெரியவந்துள்ளது. 19 வயதுடைய ஷர்மா, உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவன் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இதனிடையே, ராம் பகத் கோபால் சர்மா, ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ராம் பகத் கோபால் சர்மா, தனது பேஸ்புக் பக்கத்தில், “ஒரு வேளை நான் இறந்து விட்டால், என் மீது காவிக்கொடி போர்த்தப்பட வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது உத்தரபிரதேசத்தில் அபிஷேக் குப்தா என்பவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கப் போவதாகவும் அவர் தனது பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் கை பகுதியில் காயம் அடைந்துள்ளார் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் சதாப் பாரூக். கையில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மாணவரை நோக்கி கோபால் சர்மா துப்பாக்கியால் சுட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

கோபால் சர்மா, துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே, பின்னோக்கி நடந்து செல்கிறார். அப்போது, பல மீடியாக்காரர்கள், கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்களை அந்த மிரட்டல்காரரை நோக்கி காண்பித்தபடி படம் எடுத்தபடியே நடந்து செல்கிறார்கள். அவர் பின்னால் செல்ல செல்ல கேமராக்களும் அவர் பின்னால் தொடர்ந்து செல்கின்றன. அதே நேரம் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பின்பக்கமாக பல போலீஸ்காரர்கள் நிற்கிறார்கள்.

பின்னால் நிற்கும் போலீசார், கோபால் சர்மாவின், முழங்காலுக்கு கீழாக துப்பாக்கிச் சூடு நடத்தியாவது, இவரை தடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஓடிவந்தும் பிடிக்கவில்லை. இந்த நபர் துப்பாக்கியால் மாணவரை நோக்கி ஒரு ரவுண்டு சுடுகிறார். அதன் பிறகுதான் சற்று வேகமாக நடந்து வந்த ஒரு போலீஸ்காரர் அவர் கையை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றுகிறார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். மீடியாக்கள் எப்படி இவ்வளவு தைரியமாக, துப்பாக்கி ஏந்தியவர் முன்னால் கேமராவைத் தூக்கிச் செல்ல முடிகிறது? இது வித்தியாசமாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனிடையே, துரோகிகளை சுட்டு கொல்ல வேண்டும் என பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒருவகையில், இந்த துப்பாக்கி சூடுக்கு பொறுப்பாவார். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter