அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் கடந்த இரு வாரங்களாக டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) காலை 6 மணியளவில் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 4 மணியளவில் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக தலைவர் மாலிக் அவர்கள் துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் டெங்கு ஒழிப்பு குறித்த பதாகைகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். TIYA சங்கத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி மேலத்தெரு முழுவதும் சுற்றி இறுதியாக மீண்டும் TIYA சங்கத்திலேயே நிறைவு பெற்றது.