டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமுமுகவின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளர் முகமது இம்ரான் தலைமையேற்றார், SMI பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் துவக்கவுரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் சேக் அஜ்மல், மமக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் சிற்றுரை நிகழ்த்தினர். சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணை செயலாளர் குர்சித் அகமது கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சகோதரர் முஸ்தபா நன்றியுரை நிகழ்த்தினார்.