137
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தகவலை ஏ.என்.ஏ செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இரவு 7 மணியளவில், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா தொல்லை காரணமாக சோனியா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே, சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.